
இந்தியாவில் மட்டுமல்ல மலேசியாவிலும் எந்திரன் அனல் பறக்க ஆரம்பித்து விட்டன! ஏன்! உலகமெங்கும் உள்ள ரசிக மக்கள் இந்த வாரத்தில் ஒரு நாளை நோக்கி காத்திருக்கிறார்கள்!
ஆமாம் அது ஜூலை 31ம் தேதி மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் உள்ள புட்ரஜெயா இன்டர்நேஷனல் கன்வென்ஷன் சென்டரில் நடக்கும் மிகப் பிரமாண்டமான, மிக ஆர்ப்பாட்டமான விழாவில் ரசிகர்களின் முன்னிலையில் வெளியாக இருக்கிற நமது தலைவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து பட்டைய கிளப்ப வரும் எந்திரன் படத்தின் ஆடியோ வெளிடாகும் பரபரப்புக்குரிய அந்த நாள் .
கலைஞருடைய வாழ்த்துச் செய்தி வீடியோ வடிவில் பதிவு செய்யப்பட்டு உள்ளதாம், விழா அன்று அவர் சுபெர்ச்டரின் நனை வாழ்த்துவது ஒளிபரப்பப்படுமாம்.

இந்த பிரமாண்டமான நிகழ்ச்சியை மலேசியாவில் அஸ்ட்ரோ வானவில் மற்றும் இந்தியாவில் சன் டிவி நேரடியாக ஒளிபரப்ப இருக்கிறது.
நமது தலைவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த எந்திரன் இந்த படத்தின் இசையை தான் தென்னிந்திய ஆடியோ விற்பனை வரலாற்றிலேயே அதிக விலைக்கு வாங்கப்பெற்றுள்ளதாம். Think Musicக்கு ரசிகர்களான நமது அதரவு உண்டு!
வில்லனாக வரும் ரோபோ Stills இரண்டே இரண்டு வந்திருக்கு..ஒரு வரில சொல்லனும்னா "சேட்டை". அவ்ளோ அழகு தலைவரு..அடி தூள் கிளப்புவோம்ல!

No comments:
Post a Comment