Thursday, November 25, 2010

Superstar endra pattam yaar thanthu thalaivarukku?



தலைவருக்கு யாரு முதலில் ரசிகர் மன்றம் ஆரம்பித்தார்கள், யாரு அவருக்கு சூப்பர் ஸ்டார் பட்டம் கொடுத்தது என்று இந்த தலைமுறை சத்தியமா தெரியாது..அவர்களுக்காக..

தலைவருக்கு முதன் முதலில் ரசிகர் மன்றம் ஆரம்பித்த ஊர் என்ற பெருமை மதுரையையே சேரும்.. அது அவர் ஹீரோவான பிறகு ஆரம்பித்தது இல்லை..அவர் வில்லனாக திரையுலகில் வெற்றிக்கொடி கட்டிக்கொண்டு இருக்கும்போதே தொடங்கினார்கள் மதுரை ரசிகர்கள்! (அங்கு இருக்கும் வழக்கமான வட்டார மொழி 'ரஜினி'யும் மூன்று எழுத்து மதுரையும் மூன்று எழுத்து! என்பது ) அந்த காலக்கட்டத்தில் சிவாஜி, எம்.ஜி.ஆர் தவிர்த்து பல ஹீரோக்களுக்கே ரசிகர் மன்றங்கள் இல்லையாம்!

தலைவரை சூப்பர் ஸ்டார் என்று அகில உலகமே கொண்டாடுக்கிறது..

சூப்பர் ஸ்டார் என்கின்ற சக்தி வாய்ந்த பட்டத்திற்கு பின் ஒரு அழகான... ரசனையான... வரலாறு இருக்கிறது. அந்த பட்டத்தை தலைவருக்கு கொடுத்து அதிகாரப் பூர்வமாக உலகுக்கு அறிமுகம் செய்து வைத்தவர் ஒரு ரசிகர், அவர் பெயர் கலைப்புலி எஸ் தாணு அவர்கள். 1978 ஆம் ஆண்டு வெளிவந்த தலைவர் நடித்த பைரவி படத்தில் PRO-வாக தாணு இருந்தார். தாணு எது செய்தாலும் ஒரு வித்தியாசம் இருக்கும்.

அப்போது தான்.. சூப்பர் ஸ்டார் ரஜினி நடிக்கும் பைரவி என்று நாளிதழ்களில் விளம்பரம் செய்தும், சென்னை கிருஷ்ணவேணி திரையரங்கில் கட் அவுட் வைத்தும் அழகு பார்த்தார் நம்ம தாணு..தலைவர் எவ்வளவோ தடுத்து பார்த்தாராம்...உரிமையுடன் அதனை தடுத்து, அன்றைய ரசிகர்களின் எண்ணவோட்டத்தை உணர்ந்து சூப்பர் ஸ்டார் பட்டத்தினை தலைவர் ரஜினி ரசிகர்களின் மாபெரும் சொத்தாகினார். இன்று கனவிலும் அசைக்க முடியாத, ரசிகர்களின் இதயத்தின் அடையாளமாக.. நமது மந்திரமாக விளங்குகிறது!

பல பேரு நினைச்சுக்கலாம் இது தலைவரே போட்டுக்கிட்ட பட்டம் என்று .. ஏன்னா பல நாதாரிங்க(இன்றைய இளம் நடிகர்கள்) தங்களை தானே விளம்பரப்படுத்தி 'கொல்'கிறது!

எங்க தலைவர் எப்போதுமே பேரு புகழ்ல தேடி போறவர் இல்ல..அது தானா தேடி வரும் எங்க தலைவரை!! அதான்டா எங்க தலைவரோட வல்லமை!

இந்த பட்டம் இந்தியா முழுக்க.. அரசியலிலும் சரி, திரையுலகிலும் சரி எவ்வளவு சக்தி வாய்ந்தது என்பது நம்மை விட அரசியல்வியாதிகளுக்கு நல்லாவே தெரியும்.

Image coutersy: envazhi.com



No comments:

Post a Comment

Related Posts with Thumbnails